ரணம் என்பது எவராலும் தடுக்க முடியாத ஒன்று. பிறப்பை எவ்வாறு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோமோ, அதேபோல் இறப்பையும் துக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த மரணம் எவ்வாறு நிகழ்கிறது? ஒரு மனிதனை மரணம் எவ்வாறு தழுவுகின்றது என்பதெல்லாம் எப்பொழுதுமே ஆச்சரியமானதே.மரணத்தைக் குறித்து ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டுள்ளது. அதன்படி மரணம் ஒருவரை நெருங்குவதற்கான அறிகுறிகள் குறித்து கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அப்படி என்னென்ன அறிகுறிகள் தென்படும் என இந்தப் பதிவில் பார்ப்போம்…ஒரு மனிதன் தன்னைச் சுற்றி ஒரு எதிர்மறை ஆற்றல் நிரம்புவதை எப்போது உணர்கிறானோ, அப்போது குறித்த அந்த நபருக்கு ஏதேனும் ஆபத்து நடைபெறப் போகிறது என்று அர்த்தம்.
மரணம் ஒருவரை நெருங்கி வருகிறது என்றால், அவரது உள்ளங் கைகளில் உள்ள ரேகைகள் மறையத் தொடங்குமாம். எனவே திடீரென்று ரேகைகள் மறைந்தால், ஜாக்கிரதையாக இருங்கள்.
நில நடுக்கத்தில் சிக்குதல், வெள்ளப் பெருக்கில் மாட்டிக்கொள்ளல், தீயில் சிக்கிக் கொள்ளுதல், வானத்திலிருந்து வித்தியாசமான ஒளியைக் காணுதல் போன்ற மர்மமான சில விடயங்களை காணத் தொடங்கினால், குறித்த அந்த நபரின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம்.
எந்தவொரு காரணமும் இல்லாமல் மனம் சரியில்லாமல் போய், இதுவரையில் செய்த பாவ காரியங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்து, மன வருத்தம் ஏற்படும். இதை வைத்தும் அந் நபரை மரணம் நெருங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கனவில் நமது முன்னோர்கள் அழுவதையோ அல்லது ஓடிப்போவதையோ கண்டால் மரணம் நம்மை தேடி வருகிறது என்று அர்த்தம்.