யாழில் பிரபலமான கணித ஆசிரியர் காலமானார்!

0

யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (14-03-2023) ஆசிரியர் காலமானார்.கடந்த1990 களில் இருந்து கணித பாடத்தில் மிகவும் பிரபலமான ஆசிரியராக திகழ்ந்தார்.

அவரது பூதவுடல் அவரது கல்வி நிறுவனத்தில் இன்று மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (15-03-2023) பிற்பகல் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் கோம்பயன்மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *