இலங்கையில் விட்டு அதிகளவில் வெளியேறும் தகவல் தொழிநுட்ப பணியாளர்கள்!

0

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றுவோர் நாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளதாக இலங்கை கணனி தொழிற்நுட்ப சபையின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.

பணத்தை முதலீடு செய்ய தயங்கும் தகவல் தொழிநுட்பவியலாளர்கள்
இலங்கையில் இருந்து வெளியேறும் தகவல் தொழிநுட்ப பணியாளர்கள் | It Professionals Leaving The Country

தகவல் தொழிநுட்பத்துறையில் பணம் சம்பாதிக்கும் பலர் இருக்கின்றனர். எனினும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் தமது பணத்தை முதலீடு செய்ய அவர்கள் விரும்பவில்லை.

தகவல் தொழிநுட்பத்துறையின் ஊடாக ஐந்து பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும். அதற்கு அரசாங்கத்தின் உதவிகள் அவசியம் எனவும் ஹெட்டிஹேவா கூறியுள்ளார்.

அறவிடப்படும் வரி கல்வி மற்றும் புதிய உற்பத்தித்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்
இலங்கையில் இருந்து வெளியேறும் தகவல் தொழிநுட்ப பணியாளர்கள் | It Professionals Leaving The Country

அதேவேளை தம்மிடம் அறவிடப்படும் வரி வருமானத்தை நாட்டின் கல்வி மற்றும் புதிய உற்பத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு தகவல் தொழிநுட்பத்துறையில் இருப்போர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரியை செலுத்த தமக்கு சில காலஅவகாசம் வழங்கினால், 30 வீத வரியை செலுத்துவதில் சிக்கல் இல்லை என இலங்கை கணனி தொழிநுட்ப சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் ஹெட்டிஹேவா மேலும் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *