இலங்கையர்களுக்கு ஈ-விசா (eVisa) வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதிகள் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
நீங்கன் ஈ-விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழ்வரும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html