Thinam.com

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
முகப்பு விளம்பரம்
விளம்பரம்

கேரளாவில் 100 தியேட்டரில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆனது : தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது

E-mail Print PDF

திருவனந்தபுரம்: கேரளாவில் 100 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் இன்று ரிலீஸ் ஆனது. கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் 'விஸ்வரூபம்'. இப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கிடையில் சில முஸ்லிம் அமைப்பினர் படத்தை தடை செய்ய கோரி 2 நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்தனர். பிறகு தமிழக அரசிடம் புகார் தந்தனர். இதையடுத்து படத்தை திரையிட 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கமல் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்து, 'இந்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வரும் 26ம் தேதி (நாளை) படத்தை பார்த்துவிட்டு பிறகு உரிய உத்தரவு 28ம் தேதி பிறப்பிக்கப்படும்' என்றார். இந்நிலையில் படத்தை 2 வார காலத்துக்கு திரையிட புதுச்சேரியில் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் ஜே.அசோக்குமார் நேற்று அறிவித்தார்.

கேரளாவிலும் விஸ்வரூபம் படம் இன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலையிலேயே தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கேரள அரசின் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 10 திரையரங்குகள் உள்பட 100 திரையரங்குகளில் படம் இன்று காலை ரிலீசானது. விஸ்வரூபத்துக்காக ஒவ்வொரு தியேட்டரிலும் அதிநவீன சவுண்ட் சிஸ்டம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  படத்தை காண ரசிகர்கள் காலையிலேயே திரையரங்கு முன்பு கூடியிருந்தனர். எர்ணாகுளத்தில் ஸ்ரீதர் தியேட்டர், திருவனந்தபுரத்தில் கைரளி, நியூ தியேட்டர் உள்பட 14 மாவட்டங்களிலும் படம் ரிலீஸ் ஆனது.

கர்நாடகத்தில் 'விஸ்வரூபம்' வெளியீடு

கர்நாடக மாநிலத்தில் 'விஸ்வரூபம்' திரைப்படம் 50 திரையரங்குகளில் பிற்பகலில் வெளியிட விநியோகிஸ்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். பெங்களூரில் மட்டும் 35 திரையரங்குகளில் விஸ்வரூபத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Last Updated on Friday, 03 May 2013 11:24
 

நித்தியானந்தாவை கைது செய்ய வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை.

E-mail Print PDF

மதுரை: புதிய மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவை கைது செய்ய வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம், நித்தியை கைது செய்யக் கோரி சமூக நல ஆதரவு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பூசைத்துரை தலைமையில் மனு கொடுத்தனர். ஆதீன பாரம்பரிய முறைப்படி நித்தியானந்தா ஆதீனமாக நியமிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். ரூ.1 கோடி கொடுத்து ஆதீன பட்டத்தை நித்தி வாங்கி விட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் குற்றப் பின்னணி கொண்ட நித்தியானந்தாவை ஆதீனமாக பட்டம் சூட்டியது இந்து சமய நெறிகளை கேலி கூத்தாக்கியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டள்ளனர். இதற்கு காரணமான மடாதிபதி அருணகிரி நாதரை பதவி நீக்கம் செய்துவிட்டு, முறைப்படி மதுரை புதிய ஆதீனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated on Friday, 03 May 2013 11:24
 

Thirukkural

E-mail Print PDF

Last Updated on Tuesday, 17 April 2012 16:51
 

உங்கள் பிரசுரிப்பு

E-mail Print PDF

இந்த மலர்களின் அழகினை போலவே உங்கள் பதிவுகளையும் படைக்க முன்வாருங்கள். மலர்களின் அழகில், ஒழுங்கில், வடிவத்தில் என விபரிக்கமுடியாத ஈர்ப்பு வண்டுகளை கவர்வது போல் உங்கள் பிரசுரிப்பு நேயர்களை கவரும் வண்ணம் பார்த்துக்கொள்வது உங்கள் கைகளிலிலேயே!

 

உங்களுக்கென்று சொந்தமாக இணையத்தளம் அமைப்பதற்கு

E-mail Print PDF

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது. இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் (Bravesites) இணையதளம். இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.

இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.

இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ்)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் போல இணையதளம் அமைப்பது இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகி விட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணையதளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.

ஓரளவுக்கேனும் எச்.டி.எம்.எல் போன்றவையும் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம். இவையெல்லாம் தேவையேயில்லை. இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ்.

வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது. பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி, மின்னஞ்சல், வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது.

தனி நபர்கள், இசை கலைஞரகள், வர்த்தக பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிற‌து. உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படையான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது. அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல‌ வேண்டும். முழு வீச்சிலான‌ இணைய‌த‌ளம் தேவை என்றால் க‌ட்ட‌ண‌ சேவைக்கு தான் செல்ல‌ வேண்டும். ஆனால் எளிதான‌து விரைவான‌து என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

Bravesites

Bravenet

Last Updated on Sunday, 12 June 2011 15:01
 
 • «
 •  Start 
 •  Prev 
 •  1 
 •  2 
 •  Next 
 •  End 
 • »


Page 1 of 2

Resources
Polls

"தினம்" தளம் பற்றிய கருத்துக் கணிப்பு ?
 

Who's Online

We have 4 guests online

Advertisement


விசேட குறிப்பு :

புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி வெளிநாடுகளில் 9.8 இலட்சம் கோடியை முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த கடாபிக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதத்தில் புரட்சி வெடித்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்றது.

ஐ.நா உத்தரவின் பேரில் நேட்டோ படையும் புரட்சியாளர்களுக்கு உதவியது. இந்நிலையில், கடந்த 20ஆம் திதி தனது சொந்த ஊரான சிர்தேயிலிருந்து தப்பிக்க முயன்ற கடாபியை புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவில் முதலீடு செய்திருந்த 1.81 இலட்சம் கோடியும், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் முதலீடு செய்திருந்த சுமார் 1.47 இலட்சம் கோடியும் முடக்கப்பட்டது.

இதுதவிர, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1.47 இலட்சம் கோடி என மொத்தம் 4.9 இலட்சம் கோடியை வெளிநாடுகளில் முதலீடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், 9.8 இலட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்தி-குறிப்பு

ஜவாஹிரியையும் கொல்வோம்: அமெரிக்கா திட்டவட்டம்

அல் காய்தா அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அல்-காய்தா அமைப்பு தங்கள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அந்த அமைப்பையே முற்றிலுமாக இல்லாமல் செய்வதுதான் அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். ஜவாஹிரியைப் பிடிப்பது அல்லது ஒசாமா பின் லேடனைப் போல சுட்டுக் கொல்வது உள்ளிட்ட நடவடிக்கையை ஜவாஹிரிக்கு எதிராகவும் எடுப்போம் என்று அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் கூறினார்.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அல்-காய்தா அமைப்பின் புதிய தலைவராக ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டிருப்பது தமக்கு எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை என்று குறிப்பிட்ட முல்லன், அல்-காய்தா அமைப்பின் தலைவராக யார் பொறுப்பேற்றாலும் அவரை பிடித்துக் கொன்று விடுவது ஒன்றுதான் சிறந்த வழி என முன்னாள் ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன்னதாக உறுதிபட தெரிவித்ததாகக் கூறினார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜவாஹிரிக்கு சில சிக்கல்கள் இருக்கக் கூடும். ஏனெனில் முந்தைய தலைவரான ஒசாமா பின் லேடன், அந்த இயக்கம் தோன்றியதிலிருந்து தலைவராக செயல்பட்டவர். மேலும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பிரச்னை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஆனால் இவையனைத்தும் ஜவாஹிரியிடம் கிடையாது. மேலும் அவர் எகிப்தியர் என்பதால் அல்-காய்தா அமைப்பினரிடையே ஒருவித சந்தேகம் அவர் மீது உள்ளது.

ஒசாமா பின் லேடனைக் கண்டுபிடிப்பதற்கு பெருமளவில் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டன. ஆனாலும் அல்-காய்தா அமைப்பு மீண்டும் துளிர்விட அனுமதிக்கப்படக்கூடாது. அவ்விதம் அவர்கள் செயல்பட ஆரம்பித்தால் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை, அதாவது பின் லேடனின் பிரதான நோக்கத்தை செயல்படுத்தத் தொடங்கிவிடுவர். எனவே அவர்களது செயல்பாட்டைத் தடுக்க ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ஸ் குறிப்பிட்டதையும் முல்லன் சுட்டிக் காட்டினார்.புதிய தலைவரைத் தேர்வு செய்ய 7 வார கால தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களது செயல்பாடு வழக்கமாக இதுபோலத்தான் இருக்கும் என்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.