Thinam.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
முதல் பக்கம் உங்களை வரவேற்கின்றது !Polls

"தினம்" தளம் பற்றிய கருத்துக் கணிப்பு ?
 

Who's Online

We have 4 guests and 1 member online

விசேட குறிப்பு :

71 வயதான நடிகர் ரவிச்சந்திரன் உடல்நிலைக் கோளாறு காரணமாக 25.07.2011 அன்று காலமானார். மறைந்த ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 25.07.2011 அன்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக்கமலம், அதே கண்கன், உட்பட சுமார் 180 திரைப்படங்களில் முத்திரை பதித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று போற்றப்பட்டு, அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள்.

1964ஆம் ஆண்டு தனது கலைப் பயணத்தைத் துவக்கி, சமீப காலம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரவிச்சந்திரன் அவர்களுடைய மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.,

ரவிச்சந்திரனின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ரவிச்சந்திரனின் மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார்.

71 வயதான நடிகர் ரவிச்சந்திரன் உடல்நிலைக் கோளாறு காரணமாக 25.07.2011 அன்று காலமானார். மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,ரவிச்சந்திரன் கலைஞரிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர். ரவிச்சந்திரனின் மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார். அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கு கலைஞர் அவர்கள் சார்பிலும், திமுக சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முதல் ஈஸ்ட்மேன் கலர்பட கதாநாயகன் ரவிச்சந்திரன்

பழம்பெரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. 1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட்டணிக்கு இணையாக வளர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர். சுறுசுறுப்பான நடிப்பு, நடனம், சண்டை, கணீர் குரல், ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்தார்.

ரவிச்சந்திரன். வெள்ளி விழா நாயகன், சின்ன எம்.ஜி.ஆர்., கலை நிலவு, கலையுலக இளவரசர், கலைஞர் திலகம், புரட்சி கலைஞர் போன்ற பட்டங்கள் பெற்றவர். இவரது இயர்பெயர் ராமன். சொந்த ஊர் கரூர் அருகில் உள்ள வாங்கல். சீனி வாசன்-லட்சுமிதம் பதிக்கு பிறந்த இவர் மலேசியாவில் குடியேறி வாழ்ந்தார்.

1964-ல் காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க வாய்ப்பளித்த போது ஸ்ரீதர் இவருக்கு ராமன் என்ற பெயரை ரவிச்சந்திரன் என மாற்றினார். இரண்டு வருட ஒப்பந்தத்தில் மாதம் ரூ. 500 பிறகு ரூ. 750 என சம்பளம் வாங்கினார். அப்போது ஒரு பவுன் தங்கம் விலை 75 ரூபாய்தான். சில வருடங்களுக்கு பின் மாத சம்பளத்தை ரூ. 1000 ஆக உயர்த்தினார். இயக்குனர் ஸ்ரீதர் முன் நின்று பேச பெரிய நடிகர்களே தயங்கிய சமயத்தில் முதல் சந்திப்பிலேயே தைரியமாகவும் ஸ்டைலாகவும் பேசி கவர்ந்தார்.

தமிழ் சினிமாவின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படமான காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகம் ஆனார். இவருடன் முத்துராமன், ராஜஸ்ரீ, சச்சு, பாலையா, நாகேஷ் போன்றோர் இணைந்து நடித்தனர். இப்படத்தில் வரும் விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. பிறகு கே.ஆர்.விஜயாவுடன் நடித்த இதயகமலம் படம் வெற்றி கண்டது. அதில் வரும் நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போபோ போ, உன்னை காணத கண்ணும் கண்ணல்ல பாடல்கள் ரசிகர்களின் நாடிநரம்புகளில் ஊடுருவியது.

அதே கண்கள் திகில் படத்திலும் கலக்கினார். நான், குமரி பெண், பாக்தாத் பேரழகி, மோட்டார்சுந்தரம் பிள்ளை, மகராசி உள்பட 15 படங்களில் இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார். இவர்கள் கூட்டணியில் இடம் பெற்ற படங்களின் பாடல்கள் பிரபலம். பாக்தாத் பேரழகி படத்தில் நிஜமான சிங்கத்துடன் நடிக்க வேண்டியதாயிற்று. ரவிச்சந்திரன் பயந்தார். அவருக்கு தைரியம் சொல்லி ஜெயலலிதா சிங்கத்தின் அருகில் சென்று பழகி காட்டினார்.

அப்போது ஜெயலலிதாவின் தைரியத்தை கண்டு வியந்தார். திரையுலகில் கத்திச் சண்டை, குதிரை சவாரி போன்ற சாகசங்கள் தெரிந்தவர் விஜயபுரி வீரன் சி.எல்.ஆனந்தன். அவருடன் குதிரை சவாரி செய்து கல்யாண மண்டபம் என்ற படத்தில் நடித்தார்.

திரையுலகில் பாட்டு பாடி, சண்டை போட்ட நாயகன் ரவிச்சந்திரன் எங்க பாப்பா படத்தில் நான் பாட்டால் அடிப்பேன் ஓடி என்று பாடிக்கொண்டே சவுக்கால் அடிப்பார். நான் படத்தில் காரிலும், குமரிப்பெண் படத்தில் சைக்கிளிலும், மதராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ்சிலும், காதல் ஜோடி படத்தில் மாட்டு வண்டியிலும் பாடல்களை பாடி நடித்துள்ளார்.

ஸ்ரீதர், டி.ஆர்.கோ பண்ணா, கே.ஆர்.பாலன், ஏ.வி.எம். போன்ற பிரபலங்கள் முதல் அண்ணா, கலைஞர் கருணாநிதி வரை எல்லா முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் படங்களை பண்ணிய பெருமை இவருக்கு உண்டு.

ரவிச்சந்திரனின் அழகு, ஸ்டைல் அப்போதைய இளம்பெண்களை கவர்ந்தது. ரவிச்சந்திரன் வாழ்கையை சினிமா எடிட்டரும், எழுத்தாளருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் டாகுமெண்டரி படமாக எடுக்கிறார். 5 மலையாள படங்களில் ரவிச்சந்திரன் நடித்தார். அப்போது உடன் நடித்த மலையாள நடிகை ஷீலாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் ஒரே மகன் விஷ்ணு. பிறகு விவாகரத்து செய்து ரவிச்சந்திரனும், ஷீலாவும் பிரிந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு ரவிச்சந்திரன் சுய நினைவின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மகன் விஷ்ணு கேரளாவில் இருந்து வந்து பார்த்து விட்டு சென்றார்.

ரவிச்சந்திரன் 2-வதாக விமலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு லாவண்யா என்ற மகளும், பாலாஜி, அம்சவர்த்தன் என்ற மகன்களும் உள்ளனர். அம்சவர்த்தன் சினிமாவில் நடிக்கிறார். ரவிச்சந்திரன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் சிவகுமார், நடிகர் சங்கம் சார்பில் மனோரமா, விஜயகுமார், வாகை சந்திரசேகர் மற்றும் டைரக்டர் டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன், ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எடிட்டர் சுபாஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.

 

 

 

 

செய்தி-குறிப்பு

இறு‌தி‌ப்போ‌ரி‌ல் தமிழ‌ர்க‌ள் கொல்லப்பட்டது உண்மைதான்- இலங்கை அரசு ஒப்புதல்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று முதல் முறையாக இல‌ங்கை அரசு ஒப்பு‌க் கொ‌‌ண்டு‌ள்ளது.

இலங்கையிலவிடுதலைபபுலிகளுக்கஎதிராநடைபெற்போரதொடர்பாஅறிக்கையஅந்நாட்டபாதுகாப்புததுறசெயலரகோத்தராஜப‌கச, கொழும்புவில் நே‌ற்று வெளியிட்டார். 'மனிதா‌பிமான நடவடிக்கை உண்மை பகு‌ப்பாய்வு' என்அந்அறிக்கையிலகூறப்பட்டிருப்பது:

இறுதிக்கட்போரின்போதஅப்பாவி தமிழமக்களகொல்லப்பட்டதஉண்மைதான். விடுதலைப்புலிகளுடனநடைபெற்கடுமையாசண்டையின்போது, பொதுமக்களினஇறப்பதவிர்க்முடியாததாஇருந்ததஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிபபோரினபோதகொல்லப்பட்தமிழமக்களினஇறப்புக்களைபபுறக்கணித்துவிடலாமஎன்றதெரிவித்திருக்குமஇலங்கஅரசு, முதலமுறையாபோரிலபொதுமக்களகொல்லப்பட்டார்களஎன்பதஏற்றுககொண்டிருக்கிறது.

''பொதுமக்களகொல்லப்படாமலபோரஒன்றநடத்முடியாது'' என்றபாதுகாப்புசசெயலாளரகோத்தபராஜ‌ப‌க்ச கூறினார். எனினுமபோரிலஎத்தனதமிழமக்களகொல்லப்பட்டார்களஎன்றஅரசகுறிப்பிடவில்லை. ஆனாலபோரில் 40 ஆயிரத்துக்குமமேற்பட்டவர்களகொல்லப்பட்டார்களஎன்று ஐ.நாவுமஒரலட்சத்துக்கமேற்பட்டவர்களபலியானார்களஎன்றமனிஉரிமஅமைப்புக்களுமதெரிவிக்கின்றன.

இறுதிக்கட்டபபோரினபோதஇராணுவத்தினராலமேற்கொள்ளப்பட்மனிதாபிமாமீட்புபபணி என்றஅரசவிவரிக்குமசெயற்பாடுகளகுறித்தபாதுகாப்பஅமைச்சினாலதயாரிக்கப்பட்ட "மனிதாபிமாநடவடிக்கை: உண்மைபபகுப்பாய்வஜூலை 2006 ே 2009" என்அறிக்கநேற்றவெளியிட்டவைக்கப்பட்டது.

இதற்காநிகழ்வகொழும்பஹில்டனஹோட்டலிலநடைபெற்றது. அறிக்கையவெளியிட்டவைத்தபாதுகாப்புசசெயலரகோத்தபாராஜப‌க்ச பேசுகை‌யி‌ல், தமிழீவிடுதலைபபுலிகளதொடர்பாகவுமஅந்இயக்கத்தினாலமேற்கொள்ளப்பட்செயற்பாடுகளதொடர்பாகவுமஇந்அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானத்தஏற்படுத்புலிகளவிருப்பமகொள்ளவில்லை. அவர்களினபயங்கரவாதசசெயற்பாடுகளாலதமிழ், முஸ்லிம், சிங்கமக்களஎனபபலரபலியாகினர். இந்மனிதகுஅழிவைததடுப்பதற்காகவஅரசமனிதாபிமாமீட்பநடவடிக்கைகளஆரம்பித்தது. இததொடர்பாகவஅறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீவிடுதலைபபுலிகளினசர்வதேவலையமைப்புகளுடனஇணைந்து அய‌ல் நாடுகளிலுள்தமிழபுலம்பெயர்வாசிகளஇலங்கையினநற்பெயருக்குககளங்கமஏற்படுத்துமவகையிலபல்வேறசெயற்பாடுகளமேற்கொண்டவருகிறார்கள். இறுதிக்கட்டபபோரினபோதஇராணுவத்திடமபோராளிகளசரணடைவததொடர்பாஎனக்கஎவருமஅறிவிக்கவில்லை. இராணுவத்திடமசரணடைந்விடுதலைபபுலி உறுப்பினர்களஎவருமசுட்டுக்கொல்லப்படவில்லை.

விடுதலைப்புலிகளினமுக்கிதலைவர்களாதமிழ்ச்செல்வன், சூசமற்றுமரூபனஆகியோரினகுடும்உறுப்பினர்களும்கூடசசரணடைந்தார்கள். புலிகளினஊடகத்துறைக்குபபொறுப்பாளியாஇருந்தவராதயமாஸ்டரமற்றுமஜோர்ஜமாஸ்டரஆகியோருமஇராணுவத்திடமசரணடைந்தனர்.

ேனல் 4 தொலைக்காட்சியிலதோன்றிதமிழ்வாணி ஞானகுமாரஎன்பெணவிடுதலைப்புலி உறுப்பினர். புலிகளுடனஇணைந்தசெயற்பட்ஒருவர். இவரவிடுதலைப்புலிகளினசர்வதேநடவடிக்கைகளிலதொடர்புபட்டிருந்தார்.

இலங்கையினஇறைமைக்கும், நற்பெயருக்குமகளங்கமஏற்படுத்த சேனல் 4 தொலைக்காட்சி மற்றுமவிடுதலைபபுலிகளினசர்வதேவலையமைப்புடனஇணைந்து அய‌ல்நாடுகளிலுள்புலம்பெயரதமிழர்களாலமேற்கொள்ளப்பட்டுவருமசெயற்பாடுகளுக்கஇந்அறிக்கமுற்றுப்புள்ளி வைக்குமஎன்றார்.